பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்

12



இளைய பாரதத்துக்கு

வசந்தக் கொழுந்துநிகர் வாலிபத்தின் பேரணியே!
வசந்தத் தனித்தலைவன் ஒருதடவைக் கூறியதை
இங்கின்றே பேசுகின்றேன் ஏற்றிடுக! போற்றிடுக!
தங்கத் திருநாக்கின் தத்துவச் சாரமிது.

இக்கால வாலிபர்பால் எந்நோக்கும் காணோமே!
வக்கணையாய் எல்லோரும் வாயாரப் பேசுவதே
தொழிலாய் பெருக்கித் தொலைக்கின்றார் வாழ்வதனை
எழிலும் இளவயதும் ஏதமிலா நல்லுடலும்

கொண்டபெரும் வாலிபக் குலமனைத்தும் சேர்க்கின்ற
தொண்டு புரியத் துயர்களைய வந்திடுவீர்!
அந்நாளில் வாலிபர்கள் ஆகும் இருபதுக்குள்
பொன்னும் தியாகம் புரிந்திடவே முனைவார்கள்.