பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

நடந்துகொண்டே இரு

அவன் ஒரு ஊமை!
குரல்கள் அற்றவன்!
அனலாய்க் காந்தியச்
சத்தியம் பேச
நீயோ, நானோ
நினைப்பதே இல்லை

நெட்டிப் பொம்மையாய்
நிதமும் உழல்கிறோம்!
வையம் முழுவதும்
வடிவமைத் திடவே
வண்ண வண்ண
மண்பிசைந் திடுகிறான்.

அன்பு இதயமும்
அன்பு இதழ்களும்
அன்புக் கரங்களும்
அவனது தேவை!
ஆனால், ஐயோ!
அவைகள் மூன்றும்
அவனிடம் இல்லையே
அளிப்போம் வா! வா!