பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.கோ.சண்முகம்

20


தோட்டம்

வாழ்வின் வெளியில் தோட்டம் போட
வழிதான் எதுவோ உனக்குத் தெரியுமா?
தாழ்வு எண்ணம் என்னும் பொட்டலைத்
தவிடாய் இடித்துச் சமமாய் ஆக்கு!

பழக்கம் என்னும் பக்குவ விதைகளைப்
பாத்தி பாத்தியாய் தினமும் அதில்இடு!
அழிக்க முடியா உறுதி வேலியை
அதற்கே காப்பாய் அமைத்துக் கட்டு!

பாத்தியில் விழுந்த ‘பழக்க விதைகள்’
பண்புள செயல்களாய் துளிர்க்கும் தழைக்கும்!
நேர்த்தியாம் செயல்களை விதைப்பாய் அதனால்
நிறைசுவைக் கனிகள் பயன்களாய் விளையும்!