பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

32
ஒற்றை மீன்

சாமக்கோழி கூவுது. இருள் சாகும் முகூர்த்தம் மேவுது! காமத்துக்கம் இளைக்குது! - அடிக் கரும்புத் தூக்கம் முளைக்குது!

நேற்றின்பிள்ளை 'இன்று'! - அதை நெஞ்சு மொள்ளல் நன்று! நாற்று நினைவுகள் ஆயிரம்! - அவை நாளையக் காவியப் பாயிரம்

வெள்ளம்வந்து வடிந்தால் - ஆறும் வெற்றுத்தரையின் பள்ளம்! மெல்லவந்து போன 'நேற்றை' மெல்லும் நினைவு குள்ளம்!

சாமக்கோழிக் குரலதே வரும் சரித்திரநிமிட நிரலதாம்! ஊமைவான மூலையில் சுடரும் ஒற்றைமீனே தலைச்சுழி!