பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்

40



                 தெய்வ வடிவச் சித்த ரிப்பிலும், 
                 பக்தியை ஊட்டும் படைப்பிலும் கூடப் 
                 பெண்மை எனினும் புனிதப் பொலிவைப் 
                 பண்படும் கலையின் பரிபக் குவமாய்; 
                 பண்பு. கசங்காப் பாங்கில் அமைத்த 
                 நமது மண்ணிலா இந்தக் கோரம்? 
                 கொத்திக் கிழித்த கற்பின் சிதறலில் 
                 பீய்ந்து பொசுங்கிய பெண்மைக் கதறலில் 
                 திறக்கும் ஆடையில் வியாபாரம் நடத்தலாம்! 
                 வாடிக்கை யாளர்கள்கூடி வரலாம்!
                 ஆனால், ஆனால், ஐயகோ அம்மகோ! 
                 தொட்டில் தொட்டிலாய்த் தொடர்ந்து வந்திடும் 
                 பாரதப் பெண்மை பங்கப் பட்டால் - 
                 நெட்டை வையமே நிர் மூலமாகும்! 
                 தாவணித் தொடங்கப் பதினாறு முழங்களாய் 
                 வளரும் கற்பின் ஆலய மானச் 
                 செந்தமிழ் மண்ணில் இவ்வலங் கோலம் 
                 வந்து குந்தவே வழிவிட லாமா? 
                 அந்தப் படத்தினர் சிலேடைத் தலைப்பு: 
                 மேலா? கீழா? வெட்கக் கேடு!