பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

நடந்து காெண்டே இரு!


வெளிச்சக் கிழக்கிலும்
விரியுது நரகிருள்!
ஒளிச்சிற கவிழ்க்கும்
உதயப் பறவையாய்


அன்றைய முரசின்
ஆவேச நாக்குடன்
இன்றும் வருவாய்!
இங்கேயே வருவாய்!!


"இந்தியக் குருதி நரம்புகளில்
எய்திப் பாய்ந்து வலுவூட்ட
விந்தை மிக்க மின்நெருப்பே
வெள்ளமாய்ப் பொங்கும் இந்நாள்தான்!


வீரம் மரத்த பாரதம்தான்
வேய்ங்குழல் ஊதினால் திருந்திடுமா ?
பேரிகை ஆயிரம் முழங்கட்டும்!
பெறுவீர் ஆண்மை அம்முழக்கால்!


ஈஸ்வரி சொரூபமே நம்பெண்டீர்!
இன்னல், இழிநிலை அவருற்றால்
தேசம் வாழ வழியேது ?
தெய்வமும் சிாிக்கும் பெண்மகிழ்ந்தால்!

வெற்றுத் தகவல் சேகரிப்பே
வித்தையோ கல்வியோ ஆகாது!
உற்ற ஒழுக்கம்; உயிர் இரக்கம்
ஊட்டும் கல்வியே உயர்கல்வி!