பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

46



"கடவுளை மறுப்போன் நாத்திகனாய்க்
கருதி வெறுத்தது பழஞ்சமயம்!
திடமாய்த் தனையே நம்பாதோன்
தீய நாத்திகன் இந்நாளில்!


இந்தியா என்றும் இறக்காது!
இறந்தால் உலகில் எது மிஞ்சும் ?
வந்தனைசெய் ஆன்மா பலியாகி
வையமே பணத்தின் கால்வீழும்!


என்று முழங்கிய
இமய முரசே!
வேத யாழே!
வீரக் கனலே!


வெளிச்சக் கிழக்கிலும்
விரியுது நச்சிருள்!
ஒளிச்சிற கவிழ்க்கும்
உதயப் பறவையாய் -


அன்றைய முரசின்
ஆன்மிக நாக்குடன்
இன்றும் வருவாய்!
இங்கேயே வருவாய்!