பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

48



வீரமே குலமாய் நின்றார்!
அறுபத் திரண்டாம் ஆண்டின்
அக்டோபர் இருபதாம் நாள்
தறுதலைச் சீன நாய்கள்
தண்பனி வரையின் மீது
குறிவைத்துப் பாய்ந்த போது
குமுறிய கோடி உள்ளம்
நெறிஒன்று காண லாச்சு!
நிஜம்ஒன்றும் கண்ட தன்றே!

அந்தநாள் நமக்கு மட்டும்
அதிர்ச்சியை ஊட்ட வில்லை!
இந்தமா ஞாலம் முற்றும்
இயங்குமோர் ஜனநா யகத்தின்
சிந்தையைக் கிள்ளி, அறத்தின்
சென்னியும் குலுங்க வைத்த
விந்தையாம் விபரீ தத்தின்
விஷக்குறி, சிவப்புத் தேதி!

நம்மையே நமக்கே ஈந்து
நாமாக நாமே ஆகி -
பொய்ம்மையை வீணாய் அற்பப்
பூசலைத் தொலைத்தோம் அன்றே!
வெம்மையே மறைய அன்பு
வெண்ணிலா வீசக் கண்டோம்
செம்மையை அந்த அன்புச்
செழுமையை என்றும் காப்போம்!

(1963)