பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

நடந்து கொண்டே இரு


எண்ணும் எழுத்தும்!

விழுந்ததை எடுப்போம்! கொடுத்ததைக் கேட்போம்!
விதைத்ததை அறுக்காமல் விடவா முடியும் ? கொழுந்து மனங்களில் செழுந்தேன் பாய்ச்சிக்
கொடிகளைப் படைகளை கொடுப்போம் அவர் பால்,

நொந்த குரல்களே! நொடித்த கால்களே! நூறாயிரம் சூளுரை முழங்கி எழுவரீர்!
வந்த புயலையும் வரும் புயல் களையும்
வழியில் மறிந்தே கடமை காப்போம்!

எரியும் விளக்கை அணைக்கா திருப்போம்! ஏற்றா விளக்குகளை ஏற்றிக் கொள்வோம்! சரியும் இடங்களில் அண்டை போட்டே
சாலைகள் அனைத்தும் நமதாய் ஆக்குவோம்!