பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 'தூங்காத துப்பாக்கி நிழலின் கீழ்தான்

தூயமகள் அமைதித்தாய் துயில்வாள், காண்பீர்! ஆங்காங்கு நாடெல்லாம் படைபெ ருக்கி ஆயத்தப் போர்நிலையின் முனைப்போ டிருந்தால் நீங்காத பயம் அகன்றே போரும் ஒழியும்! நிச்சயமாய் இதுவேவழி!' என்று கூறிப் பாங்காக வல்லரசு மணட லங்கள்

பனிப்போரைக் கெடுபிடியாய் நடத்த லாச்சு! பனிப்போரே குருதிப்போர் வடிவம் ஏற்கும் பயங்கரத்தின் குவலயமே வீழ்ந்த வேளை: தனிப்பகையோ தனி நட்போ ஏது மில்லாத் தங்கமணித் திருநாடாம் பார தந்தான், 'பனிப்போரா? ஈதெண்ன வெட்கக் கேடு!” படைப்பெருக்கம்! போர்முனைப்பு! அதேநே ரத்தில் இனிப்போரே இருக்காதே என்ற கூத்தே - எள்ளளவும் அறிவேற்காக் கேலிக் கூத்தே!