பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

54



நேருபிரான் பாரத்தினர் கொள்கை தன்னை
நியதியிட்டு ஐந்தாக வடித்துத் தந்தான்!
பார்புகழும் மாநாடாம் 'பாண்டுங்' தன்னால்
பஞ்சசீலக் கொள்கையதே கெட்டி யாச்சு!
'மேருமலை சஞ்சீவி' என்றே உலகம்
மேன்மேலும் அதன் மணத்தை நுகர லாச்சு!
சீருயர்ந்த அரசியலாம் விஞ்ஞா னத்தின்
சித்தாந்த சிகரதமாய் அதுவே ஆச்சு!


'பெருநாடோ சிறுநாடோ ஒன்றுக் கொன்று
பிரதான சுயஎல்லை; அதிகா ரத்தை
ஒருமித்த நட்போடு மதித்துக் காத்தல்
ஒன்றின்மீ தொன்றேபடை எடுக்கா திருத்தல்,
ஒருநாடு மற்றொன்றின் உள்விவ காரத்தில்
ஊடாடா தொதுங்கிவிடல்; சமமாம் தகுதி
உருவான ஆக்கநலம் மாற்றிக் கொள்ளல்;
உளமார்ந்த சகவாழ்வு; அமைதி வேட்கை!