பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

நடந்து கொண்டே இரு!



                நெறிக ளற்றவர்; முறைகளற்றவர்; 
                நெஞ்செனும் ஒன்றிலா நிருதர் வழியினர் 
                வெளியுடன் நம்மேல் சமத்தினர் வீண்போர்! 
                வெனிறோம்! வெல்கிறோம்! இனியும், எண்றும் 
                துறைதுறை யாகத் தொடர்ந்தும் வெல்வோம்! 
                தோலாத் தோளினர் நமதரும் படையினர் 
                செறியும் சாகசம், தியாகம் கண்டே 
                சிலிர்த்தது புவிவே! செழித்தது விரம்!
                பாரதம் என்பதோர் ஜீவ தத்துவம்! 
                பாரெனும் தேரதன் அச்சா னியதுவே! 
                பாரதம் என்பதோர் பண்பிண் ஒவியம்! 
                பாரினில் அதுவே அன்பினர் காவியம்! 
                பாரதம் என்பதோர் கண்ணாடியாகும்! 
                பார்முகம் திருத்த வேறொன்றில்லை! 
                பாரதம் சிரித்தால் பாரே சிரிக்கும்! 
                பாரதம் சிணுங்கினும் பாரே சிதையும்!
                பச்சைக் குருதியைப் பரிமா றியேனும் 
                பகைவர் கும்பலை நுாறி நொறுக்குவோம்! 
                இச்சைக் குரிய இதய பூமியின் 
                ஈரப் புகழை எண்றுமே காப்போம்! 
                கொச்சைத் தனங்கள், குதர்க்கம் விடுத்தே 
                கச்சை வரிந்து கட்டுவீர் என்றே 
                காலம் அழைக்குது! கடமை அழுத்துது