பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

வ.கோ. சண்முகம்

                      கெடுப்பவர் பிண்னே நடப்பவர் கெடுவார்! 
                      ஆடன வந்தவர் அரண்டே ஒட - 
                      அரிமா நாமென நிரூபணம் செய்தோம்! 
                      நாடெலாம் ஒருடல்; தாயகம் ஒருயிர்! 
                      நாற்பது கோடிச் சொச்சமும் ஒர்குலம்! 
                      ஏடெலாம் நாளை இப்படிப் பாடும் 
                      ஈடிலாப் பிடும் எய்தீய விட்டோம்!
                      நொங்கல; பாசல வீ ரருக் குயிர்தான்! 
                      நொடிக்கொரு முறைமாய் கோழை யுமல்ல 
                      சிங்கங் களெலாம் அணியினில் திரள்வோம்! 
                      தீரர்க ளெல்லாம் பணிசெய விரைவோம்! 
                      தங்கங்க கள் அன்புடை நெஞ்சத் 
                      தாய்க்குலம் எல்லாம் தகுபொறுப் பேற்போம்! 
                      எங்கிருதவர் படை எத்தனை வரினும் 
                      இன்றுபோல் பாடம் அண்றும் புகட்டுவோம்!
                      தொல்காப் பியத்தின் சூத்திரம் கற்றோர் 
                      துப்பாக்கி சுட்டிடும் சூட்சமம் கற்போம்! 
                      ஒல்காப் புகழின் 'உரைகள்' நிறுத்தி 
                      உருப்படியான தொண்டுகள் செய்வோம்! 
                      நல்காக் கரம்பு நிலத்திலுங் கூட 
                      நற்பயிர் அனைத்தும் முனைந்தே வளர்ப்போம்! 
                      மங்காத் தொழில்கள் இனிஏ தெனும்படி - 
                      மாற்றவர் மருள கைவளம் காட்டுவோம்!