பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

நடந்து காெண்டே இரு!



பாரதம் என்பதோர் ஜீவ தத்துவம்!
பாரெனும் தேரதன் அச்சா ணியதுவே!
பாரதம் என்பதோர் பண்பின் ஒவியம்!
பாரினில் அதுவே அன்பின் காவியம்!
பாரதம் என்பதோர் கண்ணாடியாகும்!
பார்முகம் திருத்த வேறொன்றில்லை!
பாரதம் சிரித்தால் பாரே சிரிக்கும்!
பாரதம் சிணுங்கினும் பாரே சிதையும்!


'பச்சைக் குருதியைப் பரிமா றியேனும்
பகைவர் கும்பலை நூறி நொறுக்குவோம்!
இச்சைக் குரிய இதய பூமியின்
ஈரப் புகழை என்றுமே காப்போம்!
கொச்சைத் தனங்கள், குதர்க்கம் விடுத்தே
கூடாரம் ஒன்றாய்; கொடியும் ஒன்றாய்க்
கச்சை வரிந்து கட்டுவீர்!’ என்றே
காலம் அழைக்குது! கடமை அழுத்துது!


கேடுசெய்ய வந்தவர் கெடுவார்!
கெடுப்பவர் பிண்னே நடப்பவர் கெடுவார்!
ஆடென வந்தவர் அரண்டே ஓட
அரிமா நாமென நிரூபணம் செய்தோம்!
'நாடெலாம் ஓருடல்; தாயகம் ஒருயிர்!
நாற்பதுகோடிச் சொச்சமும் ஒர்குலம்!´
ஏடெலாம் நாளை இப்படிப் பாடும்
ஈடிலாப் பீடும் எய்தியே விட்டோம்!