பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

62

62 நொங்கல; பாசல வீரருக் குயிர்தான்! நொடிக்கொரு முறைமாய் கோழை

                         யுமல்ல! 

சிங்கங் களெலாம் அணியினில்

                     திரள்வோம்! 

தீரர்க ளெல்லாம் பணிசெய

                     விரைவோம்! 

தங்கங்க களன்ன அன்புடை நெஞ்சத் தாய்க்குலம் எல்லாம் தகுபொறுப்

                       பேற்போம்! 

எங்கிருந்தெவர் படை எத்தனை

                          வரினும் 

இன்றுபோல் பாடம் என்றும்

                     புகட்டுவோம்!

தொல்காப் பியத்தின் சூத்திரம்

                         கற்றோர் 

துப்பாக்கி சுட்டிடும் சூட்சமம்

                        கற்போம்! 

ஒல்காப் புகழின் `உரைகல்´ நிறுத்தி உருப்படியான தொண்டுகள்

                      செய்வோம்! 

நல்காக் கரம்பு நிலத்திலுங் கூட நற்பயிர் அனைத்தும் முனைந்தே

                     வளர்ப்போம்! 

மங்காத் தொழில்கள் இனிஏ

                       தெனும்படி 

மாற்றவர் மருள கைவளம்

                     காட்டுவோம்!

அடக்க விலைக்கும் அரைக்கா சேனும் அடக்கி விற்றால் இன்றதே

                       வாணிகம்! 

முடக்கிய சரக்கரை, பதுக்கிய

                        பணத்தை 

முற்றிலும் ஈந்தால் இன்றதே

                        தியாகம்! 

கொடுக்கும் விருந்தை, கொள்ளும்

                       விருந்தை 

குறைத்துக் கொண்டால் இண்றதே

                         பண்பு! 

எடுக்கும் செயல்களில், எண்ணும்

                       நினைவில் 

'இந்தியா இருந்தால் இன்றதே

                          பக்தி!