பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

நடந்து காெண்டே இரு!



நொண்டிக் கொண்டு வந்துறு 'நிஜத்தை'
நுாறு மணியும் காத்திருந் தேற்போம்!
முண்டி அடித்து முன்னே குதிக்கும்
மொட்டை 'வதந்தி'யை எட்டி உதைப்போம்!
கெண்டை ஒன்று விறாலை விழுங்குமா ?
கேட்பவன் விழித்தால் 'அளப்பவன்' பறப்பான்!
சண்டை நீளினும் அமைதி இழப்பினும்
சத்தியம் மட்டுமே நம்கவசமாகும்!


சீலம் ஐந்தும் அருளிய தேவன்
சிந்தை கவர்ந்த ஜோதி பூமியை
கோலப் பொழிலாம் 'காஷ்மீர்' தன்னை
கொடுமதியாளர்; குரங்குக் குணத்தினர்
நாலங் குலமும் நஞ்சாய்ப் பெற்ற
நாவினர் புரட்டால் நாமா இழப்போம் ?
காலங் குலமும் காஷ்மீர் மண்ணில்
கயவர் ஏந்திடப் போவதே இல்லை!

(1965)