பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

64



தலைமை!


'தலைவன் எவன்?' 'தலைமை எது?' கேட்டுக் கேட்டுத்
தனைத்தானே கசப்புடனே குழப்பிக் கொள்ளும்
உலகத்தின் வினாக்களுக்கு விடையே காணோம்!
உதயம்பின் உதயமாகத் 'தலைமை' பற்றிக்
கலகங்கள்; பூசல்களே முளைத்த வாறு.
காலத்தின் தேதிகளும் உதிரலாச்சு!
அலைபோல வந்து விழும்புதிர்க ளையே
அலசுகின்ற அவிழ்கின்ற 'தலைமை' இல்லை!


தலைகொடுக்க; உயிர்கொடுக்க ஏற்றுக் கொள்ளும்
'தலைமை' யினை யார்யாரோ சந்தைச் சரக்காய்
விலைகொடுத்தும் வாங்கிடும் விபரீத தந்தான்
விதிமுறையாய், நடைமுறையாய் ஆகிப் போச்சு!
கலைத்துறையில்; அரசியலில்; தொழிற்துறையில்
'கட்டாயம்' 'மிரட்டல்கள்' கையூட்டெல்லாம்
தலைமையினைத் தேர்ந்தெடுக்கும் அவலத் தையே
தகுதியிலாப் போக்கினையே காணுகின் றோம்!