பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

நடந்து காெண்டே இரு!



கொட்டாமல் விட்டுவிடும் 'பிள்ளைப்பூச்சி'

குணம்கொண்ட தலைமையாதல் ஒழுங்கே சாயும்! கொட்டியபடி யேஇருக்கும் 'தேள்' குலத்துக் குணம்காட்டும் தலைமையதால் இயக்கம் மாயும்! குட்டுமிடம் தெரிந்துமிகக் குட்ட வேண்டும்! கொஞ்சுமிடம் புரிந்தாழகாய்க் கொஞ்ச வேண்டும்! 'எட்டாத தொலை' விலேயோ, கீழேயோ இருக்காத நிலையதுவே தலைமை ஆகும்!


'மக்களுக்கு மக்களாலே ஆட்சி' என்றே மறைமுகமாய்த 'தனித்தலைமை' தனைவெறுத்தான் மிக்கபுகழ் ஆப்பிரகாம்லிங்கன்! ஆனால் ‘விஞ்சுகின்ற மக்களாட்சிக் கேடு' தன்னைத் தக்கதொரு பாத்திரமாம் ஜூலியஸ் சீஸர் தலைபோன கதைபடைத்து ஷேக்ஸ்பி யர்தான் ஒக்கவிதம் மறுக்கின்றான்! ரூஸோ கூட உரங்கொள்ளும் தலைமையினை ஒப்ப வில்லை!</poem>