பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

நடந்து காெண்டே இரு!



தங்கக் கரடி!


சமுதாயம் கேட்கின்ற பொழுது போக்குச்
சந்தோஷம் தருவதோடு; கலைகள் எல்லாம்
அமைவான வனிதமான விதத்திலேயே
அடிக்கருத்தின் மேல்ப் பூச்சாப் புதுயு கந்தான்
சமைக்கின்ற மாறுதலைச் சுட்ட வேண்டும்!
‘சாக்லேட்'டாய மருந்துதனைக் கொடுக்க வேண்டும்!
குமைச்சல்களை நமைச்சல்களை யதார்த்த வாதக்
கொள்கைக்காய்த் தீனித்திட்டான் கலையே நோகும்!


'அப்பல்லோ' சாகஸத்தால் நிலவை மிதித்தே
அவனியதே முழக்கமிட்டுத் துள்ளும் போதும்
எப்போதோ நைந்துவிட்ட 'கரு'க்களுக்கே;
இரத்தமிலாச் சோகைக்கருச் சிதைவுகளுக்கே
ஒப்பேற்றும் கதைஉருக்கள் கொடுக்கலாமா ?
உருப்படுமா சினிமாதான்! செக்குச் சுவட்டில்
சப்பாணியாய் இனிமேலும் நகர்ந்தோ மானால்
சந்தனமா பூசுவார்கள்? கரியே கிடைக்கும்!