பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே. சண்முகம்

70



நூயிரம் மாறுதல்கள் அலை அலையாய்
நொடிக்குநொடி நம்வாழ்வை மோதும் போது
கூறாத புத்தம்புதுக் கருவும்; கதையும்
கொண்டுவர எண்ணற்றோர் துடிக்கும்போது
மாறாக "நான்குசுவர் திரைக்களத்தை
மையமிட்டுக் கதைபண்ணிக் கொண்டிருந்தால்
ஏறாத 'புகழ் ஏணி' தமிழின் மண்ணில்
எடுத்தடிதான் வைத்திடுமா ? பகலின் கனவே!


விஞ்ஞான பிரம்மாக்கள் உலகுக் கீயும்
விந்தைகளை; அற்புதத்தைப் படக்க தையாய்
நெஞ்சாரப் புகழும்படி எடுக்கின் றார்கள்!
நிதநிதமும் புரட்சியினைப் புரிகின்றார்கள்!
அஞ்சாமல் செலவிட்டும்; உழைத்து ழைத்தும்
அதிசயத்தை விளைக்கின்றார் அயல்நாட் டார்கள்!
பிஞ்சாக வெம்புகின்றோம்! நாமோ கலையைப்
'பொறி கடலை அங்காடி' ஆக்கி விட்டோம்!


முன்னேறும் வாழ்க்கையதின் வேக மூச்சை;
முழுமையுள்ள மானுடத்தினர் தார்மீக கத்தை;
எந்நேரமும் களைத்துவிழா வீரர் கூட்ட
எக்காலச் சிரிப்புகளைக் காட்டினோமா ?
இன்னமும்நாம் காதலென்னும் கூடைக்குள்ளே
இருக்கின்றோம்! குடும்பக்கதை என்னும் சாக்கில்
சொன்னதையே சொல்கின்றோம்! 'அண்ணன் - தங்கை'
சுகதியாக 'புளிக்கூழே' காய்ச்சு கின்றோம்!