பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே. சண்முகம்

72



'நேற்று'களில் நீந்தாமல் 'இன்று' பொங்கும்
நீரோடை தேடிடுவோம்! மூழ்கித் திளைப்போம்!
தோற்றத்தையும் தொலைத்ததையும் மொத்த மாகத்
தொகைஎண்ணிப் பெறுகின்ற நம்பிக்கையை
நாற்றங்கால் ஆக்கிடுவோம்! சினிமாத் தமிழின்
நடைமுறையில் புரட்சிகளைப் பெய்து வைப்போம்!
காற்றடிக்கும் நம் பக்கம்! 'தங்கக் கரடி'
கட்டாயம் இங்கும் வரும்! தமிழும் வெல்லும்!


(குறிப்பு: வையப் புகழை. வரலாற்று வாழ்த்தை தொடர்ந்தே சத்ய ஜித்ரே, விபூதி பானர்ஜியின் 'தொலை துார இடி'யை படக்காவியமாய்ப் படைத்த தினாலே ஜெர்மன் படவிழா அரும் பெரும் பரிசாய்த் 'தங்கக் கரடி' யை ரே'ய்க்குத் தந்தது! இந்தச் செய்திச் சிந்தையைக் கிள்ள எழுந்த கவிதையின் ரூபம் இதுவே!)

(1974)