பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

நடந்து காெண்டே இரு!



உன்னை நீ உணர்வதற்கும் உலகாயதம் அறிவதற்கும்

எண்னதான் செய்தார்கள், இந்த 'மகா புருஷன்கள்' ?

வாக்காளர் மட்டத்தில் வைக்காமல் சமூகத்தை

ஆக்குகின்ற பிரம்மாவாய் அவர்களுனைத்துதித்தாரா ?

நாகரிகக் கலாசார நற்சிந்தைப் போக்குகளில்

வாகாக உனைவளர்க்க வழியேதும் செய்தாரா ?


போகட்டும் அதுவென்றால் பூப்போன்ற உண் மனதைத்

தீ கக்கும் அரசியலில் திணித்து விட்டு நழுவுகின்றார்!

கேழ்வரகா நெய்வடிக்கும் ? கெட்டதொரு அரசியலா

தாழ்வகற்றி உன் வாழ்வைத் தகத்தகாயம் ஆக்கிவிடும் ?

மலைவிளக்காய் மன்பதையின் மனவிளக்காய் இமைக்காமல்

புலை நாற்றம் வீசுகின்ற பொறிவலையாய்க் கலையுலகம்,

பணம் பண்ணும் முதலைகளின் பண்டகச் சாலைகளாய்

கணம் தோறும் படஉலகம் கருத்தின்றிக் கட்டிண்றி

மாறிவரும் அவலத்தின் மறுவிளைவு கருதாமல்

சிறிமிகச் சினக்காமல் சிறுபிள்ளை மெத்தனத்தில்

இன்னும் நீ உழன்றிட்டால் இருப்பதுவும் பறிபோகும்!