பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

76



மின்னி மினுக்குகின்ற மேனாட்டுப் பொய்ச்சரக்கின்

அச்சாகி நம் கலைகள் ஆபாசக் கூத்தாடும்!

கச்சை அவிழ்த்தெறியும் கண்றாவி மிஞ்சிவிடும்!

கூலியது குறைந்தால் கூப்பாடு போடும் நீ;

ஆலைக் கதவடைப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் நீ

வயற்காட்டுத் தகறாறில் வழக்காடப் போகும் நீ;

அயலார்கள் ஊடுருவின் அனல் மலையாய் வெடிக்கும் நீ,

களிப்பூட்டும் உன்கலையில் கண்ணியத்தைச் சாகடிக்கும்

வெளிப் புறத்து உறவுகளை விளையாட விடலாமா ?


கண்ணுக்கு கண்தோறும் காட்சிகளின் ருசிமாறும்!

மண்ணுக்கு மண்தோறும் மனப்பண்பின் பசிமாறும்!
 
பைந்தமிழ் குரல்கொடுக்கக் காற்றோடு கொஞ்சிவரும்
 
பைரவியின் போதையதைப் பட்டாசு தந்திடுமோ ?
 
நாமுண்டு! நம் கலையின் நல்லதொரு மரபுண்டு!!
 
சேமங்கள் அத்தனைக்கும் திருக்கோயில் அதுவாகும்!

இருந்து வரும் பழங்கலைகள்; இன்று வரும் புதுக்கலைகள்

பொருந்தத்தரும் நலமான பொலிவை வலிவை யெல்லாம்

அள்ளி இனி வழங்குதற்கே அச்சாணி எனத்தகும் நீ

துள்ளி எழுந்திராடா! தோள்தட்டிப் புரட்சியிடு!