பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

நடந்து காெண்டே இரு!




கலைஎன்றால், அதற்கும்ஒரு நோக்கம் வேண்டும்!
கட்டாயம் அந்நோக்கில் தூய்மை வேண்டும்!
'கலைஎன்றால் கலையேதான்' அதனின் நோக்கோ
களிப்பூட்டல் மக்களுக்கே!' என்றோர் கருத்தும்,
'கலைஎன்றால் கல்வியதன் மறுப திப்பே!
கற்பித்தலே அதன்குறிக்கோள்!' என்றோர்கருத்தும்
நிலவுகின்ற 'இருதுருவக் கொள்கை' உண்டு!
நிஜம்என்ன ? இரண்டுமில்லை! இரண்டுமேதான்!!


அன்றிருந்த கலைகளெல்லாம் பகட்டுச் சின்னம்!
அரண்மனையின் - மாளிகையின் சீத னங்கள்!
மன்றடைந்துக் கலைவிருந்தை மாந்து கின்ற
மக்களுக்கும் அவைகளுக்கும் தொடர்பே இல்லை!
இன்றிருக்கும் கலைத்துறையின் நிலையில் நோக்கில்
எப்பக்கம் பார்த்தாலும் 'மக்களின் தேவை'
ஒன்றிருக்கும் நிச்சயமாய்! கல்வி, களிப்பு
ஒத்தவிதம் கலந்தகலை இந்நாள் படைப்பே!