பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே. சண்முகம்

80




சினிமாக்கலைக் கர்த்தாக்களின் 'மெக்கா' வாகத்
திகழ்கின்ற ஹாலிவுட்டுக் காரர் கூடத்
தனிக்கருத்தோ தனிநபரோ மைய மாகத்
தாங்கிவரும் 'நேர்கோட்டு'க் கதைகளையே
இனிக்கும்படிப் படமெடுத்துச் செழிக்கின் றார்கள்!
இங்குள்ளோர் கலைவிழிப்புத் துளியு மின்றிக்
'கனி ஒதுக்கக் காய்பொறுக்கி'க் தொலைக்கின் றாரே!
கலை எழிலை, மன்பதையைக் கெடுக்கின் றாரே!


திரைக்கலையின் 'முழுவட்ட' ஷேம லாபம்
செழுங்கருத்தைச் சுமந்துவரும் உயிர்க்க தையில்
வரையறுத்து முன்கூட்டித் திட்ட மிட்ட
வரம்பகலாப் படப்பிடிப்புச் செலவின் தொகையில்
'கரைகண்ட வியாபாரக் கைகள்' மாறிக்
கலைமூச்சே தம்மூச்சாய், தேசீ யத்தின்
நுரைகட்டும் புதுத்தேவை உணர்வோர் கரங்கள்
நுழைவதிலுமே இனியுண்டு! மறக்க வேண்டாம்!