பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

நடந்து காெண்டே இரு!



'நூ றாம்நாள் விழா'க் கொள்ளும் படங்கள் வேண்டாம்!
நுட்பங்கள் திட்பங்கள் கொப்ப ளிக்க
மாறுதலும், வேர்க்கருத்தும் பிரம்மிப் பூட்ட
'மனிதனை ஒரு மனிதனாக மட்டும் காட்டும்’
'ஆறுநாள்' மட்டும் ஒடும் சித்தி ரத்தை
அஞ்சாமல் எடுப்பவர்கள் யாவ ரேனும்
நூ றுகிலோ சர்க்கரையை அவர்வாய் போட்டு
நுவன்றிடுவோம் வாழ்த்தனைத்தும் 'அவரே' தேவை!


படமனைகள் களியாட்டக் கூடம் அல்ல!
பஜனைமடம், சங்கீத சபாக்கள் அல்ல!
படமனைகள் 'அ, ஆ' - வின் பள்ளி அல்ல!
பரமார்த்த, அரசியலின் மேடை அல்ல!
படமனைகள் வட்டிக்கடைக் கல்லா அல்ல!
பாமரரின் வழிபாட்டுத் தலங்கள் அல்ல!
படமனைகள் இனி, புதிய வையகத்துப்
பசுங்கனவின் பூஞ்சோலை ஆமாம்! ஆமாம்!!