பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

விந்தன்


“கடைசி வரையிலே இழந்த காதலைப் படமாக்க யாருமே துணியவில்லையா ?”

“என்.எஸ்.கே. துணிந்தார்.ஆனா...”

“என்ன ஆனால்...”

“படத்திலேயும் வில்லன் ஜகதீஷா என்னைப் போட்டு எடுக்க அவர் விரும்பல்லே...”

“காரணம் ?”

“அவர் என்ன நினைச்சாரோ, அது எனக்குத் தெரியாது. அந்த வேஷத்திலே எனக்குள்ள புகழை அவர் ‘ராபெரி பண்ணப் பார்க்கிறார்னு நான் நினைச்சேன்!”

“ஒருவன் சேர்த்து வைத்துள்ள பணம், கிணம், நகை நட்டைத்தான் கொள்ளை அடிப்பார்கள்; புகழைக்கூட யாராவது கொள்ளை அடிப்பது உண்டா, என்ன ?”

“கலை உலகத்திலே அது சர்வ சாதாரணம். ஏன்னா, அங்கே ஒருத்தன் பொழைக்கணும்னா அவனுக்கு மூலதனமா வேண்டியிருக்கிறது புகழ்தான்!”

“அதுவும் ஒரு விதத்திலே உண்மைதான். அது இல்லையென்றால் அவனை யார் அழைக்கப் போகிறார்கள் ?..ம், அப்புறம் ?”

“ஆளை மாத்திப் போட்டா ‘பப்ளிக்’ அதை எப்படி வரவேற்குதுன்னு தெரிஞ்சிக்க வேணாமா ? அதுக்காகப் பொன்னுசாமிப் பிள்ளைகிட்டே சொல்லி, எனக்குப் பதிலா அந்த வேஷத்திலே வேறே ஆளைப் போட்டுப் பார்க்கச் சொன்னாங்க..”

“விஷயம் அந்த அளவுக்குப் போய்விட்டதா?”

“ஆமாம்; சேலத்திலேயிருந்து நாங்க பொள்ளாச்சிக்கு வந்தோம். அங்கே என் வேஷத்தைப் பாலையாவைப் போடச் சொன்னாங்க, போட்டார். மக்கள் அவரை ஏற்கல்லே.... ஏற்கல்லேன்னா, தப்பு அவர் மேலேன்னோ, அவர் நடிப்பு மேலேன்னோ நான் சொல்ல மாட்டேன். ஏன்னா, அவரைப் பொறுத்தவரையிலே அவர் நல்ல நடிகர்; எந்த வேஷத்தைக்