பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

99


கொடுத்தாலும் அதை ஏத்து நல்லா நடிக்கக் கூடியவர். ஜனங்களுக்கு என்னவோ ஜகதீஷ் வேஷத்திலே அவரைப் பார்க்கப் பிடிக்கல்லே; ‘கொண்டா ராதாவை'ன்னு ஒரே கூச்சல் போட ஆரம்பிச்சிட்டாங்க. அந்தக் கூச்சலை அடக்கப் பி.ஜி வெங்கடேசனைப் பிடிச்சாங்க.பாவம், அவன் அல்பாயுசிலே செத்துட்டான்..நல்லாப் பாடுவான். அவனை விட்டுப் பாடச் சொல்லிக் கலாட்டாவை ஒரு வழியாச் சமாளிச்சாங்க...”

“நீங்கள் ?”

“நான் ஒண்ணும் பண்ணல்லே, மேலே என்ன நடக்குதுன்னு கவனிச்சிக்கிட்டு இருந்தேன்.கம்பெனி கோயமுத்துருக்கு வந்தது. அங்கே பி.ஏ.ராஜூ செட்டியார்னு பேர் போன ஒரு தங்க வைர நகைக் கடை வியாபாரி இல்லையா ?. அவருக்குச் சொந்தமா ‘டைமண்ட் டாக்கீஸ்'னு ஒண்ணு இருக்குது. அந்த டாக்கீஸ் அப்போ அவர் மகன் குப்புசாமிச் செட்டியார் மேற்பார்வையிலே நடந்துகிட்டிருந்தது. நான் ஏதோ ஒரு வகையிலே அவருக்கு இருநூறு ரூபா பாக்கி...”

“அதை அவர் அப்போது திருப்பிக் கொடுத்தால்தான் ஆயிற்று என்று ஒற்றைக் காலில் நின்றாரா ?”

“அப்படி ஒண்ணும் நிற்கல்லே; ‘நாடகம் நடந்து முடியட்டும், அப்புறம் கேட்டு வாங்கிக்கலாம்’னு அவர் இருந்திருப்பார் போலிருக்கு...நாடகம் நடந்தது; இங்கேயும் ‘இழந்த காதல்’ தான்...ஆனா எனக்குப் பதிலா இங்கே பாலையாவை வில்லன் ஜகதீஷாப் போடாம, பவுநீர்னு வேறே ஒரு நடிகரைப் போட்டுப் பார்த்தாங்க... இங்கே நடந்த கலாட்டா பொள்ளாச்சியிலே நடந்த கலாட்டாவைத் துக்கி அடிச்சிடிச்சி..நாடகம் பார்க்க வந்திருந்த மகா ஜனங்க அத்தனை பேரும் நாற்காலிகளைத் துக்கிக் கீழே போட்டு ஒடைச்சித் தூள் தூளாக்க ஆரம்பிச்சிட்டாங்க..அதோட விடல்லே, ஒரே ஒரு சீனிலாவது ராதா தலையைக் காட்டினாத்தான் சும்மா விடுவோம். இல்லேன்னா விட மாட்டோம்னு கத்தினாங்க. பொன்னுசாமிப் பிள்ளைக்கு ஒண்ணும் புரியல்லே; ‘யாரைப் போட்டாலும் பாழும் ஜனங்க