பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

விந்தன்


16. பெரியார் போட்ட பூட்டு

“டுமீல், டுமீல்!” என்ன சத்தம் இது ?ன்னு கேட்கிறீங்களா ?.. துப்பாக்கி சுடற சத்தந்தான் “... என்.எஸ்.கே.யைக் குறி பார்த்துச் சுட வேண்டாமா ?... அதுக்கு வேண்டிய ‘பிராக்டி'ஸை அக்கம்பக்கம் பார்த்துச் சேஞ்சிக்கிட்டிருந்தேன்...”

“அப்படியும் போலீசார் சந்தேகப்பட்டு வந்து ஏதாவது கேட்டிருப்பார்களே ?”

“எப்படிக் கேட்பாங்க, எங்க கம்பெனிதான் நாடகக் கம்பெனியாச்சே, ஏதோ ஒத்திகை நடக்குதுன்னு நெனைச்சிட்டிருந்தாங்க...”

“அப்போது நீங்கள் எந்தக் கம்பெனியில் இருந்தீர்கள் ?”

“டி.கே.சம்பங்கியின் கம்பெனியிலே இருந்தேன்...”

“அவர் வேறே கம்பெனி ஆரம்பிச்சிருந்தாரா?”

“ஆமாம், அப்போ யார் கம்பெனி ஆரம்பிச்சாலும் ஒரு நாளைக்குக் கொறைஞ்ச பட்சம் ஆயிரம் ரூபாயாவது வசூலாயிடும்...”

“அந்தக் கம்பெனியிலும்...."