பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

103


“அதே இழந்த காதல் நாடகந்தான்; எனக்கு அதே ‘வில்லன் ஜகதீஷ் வேஷந்தான்....”

“எந்த வில்லனையும் எதையாவது சொல்லிக்’ ‘குபீ’ ரென்று சிரிக்க வைத்துவிடும் என்.எஸ்.கிருஷ்ணனால் உங்களை மட்டும் சிரிக்க வைக்க முடியவில்லை போலிருக்கிறது!”

“ரொம்பப் பேர் அவரை இப்படித்தான் வெறும் சிரிப்பு நடிகருன்னே இன்னும் நெனச்சிக்கிட்டிருக்காங்க...அது தப்பு...அவர் வெறும் சிரிப்பு நடிகர் மட்டும் இல்லே, பெரிய சிந்தனையாளரும் கூட.”

“என்ன, திடீரென்று நீங்கள் அவரைப் பாராட்ட ஆரம்பித்து விட்டீர்கள் ?”

“உண்மை எங்கே இருந்தாலும்...அது என் நண்பன் கிட்டே இருந்தாலும் சரி, விரோதிகிட்டே இருந்தாலும் சரி..அதை என்னாலே பாராட்டாம இருக்க முடியாது. என்.எஸ்.கே.ய்க்கு இன்னிக்குச் சிலை சேஞ்சி வைச்சிருக்காங்க, அந்தச் சிலையை அறிஞர் அண்ணாதுரை திறந்து வைச்சிருக்காருன்னா சும்மாவா திறந்து வைச்சிருக்காங்க?...தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலே, ‘சாமி, பூதம்’னு சொல்லி ஒரு சாமானியனைக்கூட இன்னிக்கு யாராலும் ஏமாத்த முடியலேன்னா, அதுக்குக் காரணமாயிருந்தவங்களிலே என்.எஸ்.கே.யும் ஒருத்தர் இல்லையா ? படிச்சவன் முட்டாளாயிருந்தா அவனைத் திருத்தறது அவ்வளவு கஷ்டமில்லே; யாரும் திருத்திடலாம். படிக்காத முட்டாளை அவ்வளவு சுலபமா யாராலும் திருத்திட முடியாது.அந்தக் கஷ்டமான காரியத்தை எந்த விதமான எதிர்ப்புக்கும் அஞ்சாம இந்த நாட்டிலே சேஞ்சிக்கிட்டு வந்தவங்களை, சேஞ்சிக்கிட்டு வர்றவங்களை விரல் விட்டு எண்ணிடலாம்...அவங்களிலே குறிப்பிடத் தக்கவங்க ரெண்டு பேரு..."