பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னிக்குத்தான். அதுக்கு மேலேதான் அவரே நாடகம் எழுதவும், நடிக்கவும், இன்னும் சிலரை அந்த வழியிலே திருப்பி விடவும் அவர் வேலை சேஞ்சாரு. அதாலேதான் சந்தர்ப்பம் வாய்க்கும்போது பெரியாரையே எதிர்த்து நின்று வெற்றி பெறவும் அவராலே முடிஞ்சது; மற்றவங்களாலே முடியலையே? அவரை எதிர்த்தவங்க அத்தனை பேரும் இருந்த இடமே தெரியாம இல்லே போயிட்டாங்க!”

“யார் போனாலும் வந்தாலும் பெரியார் இன்னும் நிற்கிற இடத்திலேயேதானே நின்று கொண்டிருக்கிறார்!”

“அது தெரிந்துதான் அண்ணாதுரை அவரை விட்டுப் பிரிஞ்சித் தனிக் கட்சி ஆரம்பிச்சப்போகூடத் தலைவர் பதவியை அவருக்கே விட்டு வைச்சிருந்தார்...”

“இப்போது அதுகூட.”

“சரியான ஆளைத் தேடித்தான் போயிருக்குது. அந்த விஷயத்திலே பெரியாருக்குக்கூட சந்தோஷமாயிருக்கும்னு தான் நான் நெனைக்கிறேன்...”

“அதிருக்கட்டும், குமாரபாளையத்திலிருந்து, நீங்கள் எங்கே போனீர்கள் ?”

“கோயமுத்துருக்கு... அங்கிருந்த பஸ் ஸ்டாப்புக்கிட்டே கருப்பண்ணப் பிள்ளைன்னு ஒருத்தர் ஒரு தியேட்டர் நடத்திக்கிட்டு இருந்தார். அந்தத் தியேட்டர் இருந்த இடம் ஜி.டி.நாயுடுவின் இடம்னு சொன்னாங்க... அப்போ எனக்கு ஒரு எண்ணம் வந்தது... ‘மொதல் தடவையா இங்கே ஜி.டி.நாயுடுவின் தலைமையிலே நாடகத்தை ஆரம்பிச்சி வைச்சா என்ன ?ன்னு நெனைச்சேன்...நெனைச்சதோடு நிக்கல்லே, அவர் வீட்டுக்குப் போய் அவரை அழைக்கவும் அழைச்சேன்...'நாயுடு எதிலும் கொஞ்சம் கண்டிப்பான பேர்வழி’ ன்னு எனக்கு முன்னமேயே தெரியும்...இருந்தாலும் நாடகத்துக்குத் தலைமை தாங்க அவர் ஒப்புக்கு வார்னே நான் நெனைச்சேன்...நெனைச்சபடி நட்க்கல்லே; ‘நாடகத்துக்காவது, நான் தலைமைதாங்க வருவதாவது ? போய்யா, போ,’ ன்னு சொல்லி அவர் என்னை விரட்டி