பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

விந்தன்


18. விதவையின் கண்ணீர்

“எதை ஒப்புக்கலேன்னாலும் ஒண்ணை நான் அவசியம் ஒப்புக்கனும் - உள்ளே ஒண்ணு வைச்சிக்கிட்டு வெளியே ஒண்ணு பேச எனக்குத் தெரியாது. அந்த வழக்கத்தையொட்டியே சமீபத்தில் நான் சைதாப்பேட்டையிலே பேசியப்போ சொன்னேன்- ‘யாருக்குப் பின்னாலும் போய் எனக்கு வழக்கமில்லே, எல்லாருக்கும் முன்னாலே போய்தான் வழக்கம்'னு. அப்படியே நான் வாழ்ந்தவன், வாழ்பவன், வாழ்ந்துக்கிட்டு இருக்கிறவன். அதை மாத்திக்க அன்னிக்கும் என்னாலே முடியல்லே, இன்னிக்கும் என்னாலே முடியல்லே. அதுக்கு நான் என்ன செய்வேன்? அப்படிச் சொல்றது பலருடைய மனசை உறுத்தவும் சிலருடைய மனசை புண்படுத்தவும் கூடுங்கிறது எனக்குத் தெரியத்தான் தெரிகிறது. இருந்தாலும் சமயத்துக்குத் தகுந்தாப் போல ஆடினா, குழந்தைங்க தள்ளி விடறதுக்குத் தகுந்தாப்போல ஆடற தஞ்சாவூர்ப் பொம்மைக்கும் எனக்கும் என்ன வித்தியாசமிருக்கும் ? நீங்களே சொல்லுங்க, அது ஒரு பொழைப்பா? அந்தப் பொழைப்பு எனக்கு எப்பவுமே பிடிக்கிறதில்லே...”

“பிடித்திருந்தால்தான் சிறையிலிருந்து வந்த சீக்கிரத்தில் நீங்கள் என்னவெல்லாமோ ஆகியிருப்பீர்களே ?"