பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

விந்தன்


“விளம்பரத்துக்குத் துண்டுப் பிரசுரங்கள் மட்டும் அச்சிட்டுக் கொடுத்திருக்க மாட்டீர்கள்; போஸ்டர்களும் போட்டுச் சுவர்களில் ஒட்டியிருப்பீர்கள், இல்லையா ?”

“பின்னே, நாடகம் பழைய நாடகமாயிருந்தாலும் பரவாயில்லே, புதிய நாடகமாச்சே ? நிறையப் போஸ்டர்கள் போட்டு ஒட்டினேன்...”

“அந்தப் போஸ்டர்களில் யாரும் சாணி அடிக்கவில்லையா? வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொண்டு வந்து துப்பவில்லையா ?”

“அந்த மாதிரி ரசிகருங்கெல்லாம் அந்தக் காலத்திலே கிடையாது; அவங்களை ஊக்குவிக்கிற நடிகருங்களும் அப்போ இல்லே...”

“நல்ல வேளை, அப்புறம்?”

“விளம்பரத்தைக் கண்டதும் அவ்வளவு திமிரா அந்தப் பயலுக்கு ?’ ன்னு ஊர்ப் பெரிய மனுஷருங்க சில பேரு கூடினாங்க. ‘இந்த நாடகத்தை எப்படியாவது தடை செய்தே தீரனும் கிற முடிவுக்கு வந்தாங்க. என்னை மிரட்டி, கிரட்டிப் பணிய வைக்க முடியாதுன்னும் அவங்களுக்குத் தெரியும். அதாலே, இன்ன தேதியிலே, இந்த இடத்திலே எம்.ஆர். ராதா நடத்தவிருக்கும் விமலா அல்லது விதவையின் கண்ணிர்ங்கிற நாடகம் சாஸ்திரத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் விரோதமான நாடகம். அதை அவர் நடத்தினா சமூகத்தின் அமைதி குலையும்; சனாதனிகனின் மனம் புண்படும். அதாலே கோர்ட்டார் தயவு செய்து அந்த நாடகத்தைத் தடை செய்யணும்னு நாகப்பட்டினம் கோர்ட்டிலே ‘பெட்டிஷன்’ கொடுத்தாங்க. அப்போ அங்கே ஜட்ஜாயிருந்தவர் கணேசய்யர். அய்யர்னா அவங்களிலும் சிலர் ஆசாரம் கீசாரம் ஒண்ணும் இல்லாம இருப்பாங்க, அந்த ரகத்தைச் சேர்ந்த அய்யர் இல்லே அவர். ஒரு பிராமணனுக்கு எத்தனை