பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

121


வைக்க நாரதர் வருவார். அப்போ நாரதர் மாமா வந்துட்டார், மாமா வேலை செய்ய ன்னு பபூன் வேடிக்கைக்காகச் சொல்வான் எல்லாரும் சிரிப்பாங்க. ஆனா கணேசய்யர் சிரிக்க மாட்டார்; கோவிச்சுக்குவார். சட்டுன்னு சீட்டை விட்டு எழுந்து காவலுக்கு வந்திருக்கும் போலீசாரைக் கூப்பிட்டு, ‘நாரதரையாவது, ‘மாமா'ன்னு இந்த பபூன் பழிக்கிறதாவது? உடனே இவனை அரெஸ்ட் செய்யுங்கள்'ன்னு அங்கேயே ஆர்டர் போட்டுவிடுவார். அவர் எங்கே, நான் எங்கே..... ?

“இத்தனை நன்றியுணர்ச்சியோடு பேசுகிறீர்களே, அப்படி அவர் உங்களுக்கு என்னதான் செய்தார் ? அதைச் சொல்லுங்களேன் ?”

“ஒண்ணா ரெண்டா, எத்தனையோ சேஞ்சார். ஒரு சமயம் ஐந்நூறு ரூபாய் பாக்கிக்காக ஒரு புண்ணியவான் என்னை அரெஸ்ட் செய்ய போலீஸ் வாரண்டோடு, வந்துட்டான். அப்போ என் கையிலே அஞ்சி ரூபாகூடக் கிடையாது. ஐந்நூறு ரூபாய்க்கு நான் எங்கே போவேன்? ஒருத்தனா ? அவனுக்குப் பயந்து எங்கேயாவது ஓடி ஒளிய? ஒரு நாடகக் கம்பெனியே ஓடி ஒளியணும்னா அது முடிகிற காரியமா? திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவன் சமயத்துக்குக் கடவுளைக்கூடத் துணைக்கு அழைக்கக் கூடாதேன்னு திருதிருன்னு விழிச்சிக்கிட்டிருந்தேன். அப்போ அய்யர் கார் அந்தப் பக்கமா வந்ததுன்னு யாரோ சொன்னாங்க...”

“எந்த அய்யர் கார் ?”

“ஜட்ஜ் கணேசய்யர் கார்தான். அந்தக் கார் வந்து யார்கிட்டே என்ன சொல்லிச்சோ, என்ன கொடுத்ததோ, அது இன்னிக்கு வரையிலே எனக்குத் தெரியாது. ஆனா ஒண்ணு மட்டும் தெரியும் - ஐந்நூறு ரூபாய் கடன்காரன் அதுக்கப்புறம் என்னைக் கண்ட போதெல்லாம் சலாம்தான் போட்டுக்கிட்டிருந்தானே தவிர, ஒரு சல்லிக்காசுகூடச் கேட்கல்லே!”

“அப்புறம் ?"