பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

விந்தன்


“ஒரு காதல் விவகாரம். நான் காதலிச்ச ஒரு பெண்னைப் பார்த்து ஒரு சக நடிகர் சிரிச்சார். அது எனக்குப் பிடிக்கல்லே, அதுக்காக வந்த ஆத்திரத்தையும் அப்போதிருந்த வயசு வேகத்திலே என்னாலே அடக்க முடியல்லே. கையிலே எதுக்கோ வாங்கி வைச்சிருதத திராவகத்தை அவர் மேலே கொட்டிட்டேன். இப்போ நடந்த எம்.ஜி.ஆர். கேசிலேகூட அந்த நடிகரையும் ஒரு சாட்சியாச் சேர்ந்திருந்தாங்க. அவர் எனக்கு விரோதமாச் சாட்சி சொல்லமாட்டேன்னு சொல்லிட்டார்...”

“ஏன்?”

“இப்போ அவரும் நானும் நண்பர்கள்.”

“அது எப்படி நண்பர்களானீர்கள் ?”

“அதுவும் இதுவரையிலே புரியாத ஒரு புதிராய்த்தான் இருக்கு.”

“என்னிக்கும் விரோதின்னு எனக்கு இது வரையிலே யாரும் இருந்தது கிடையாது; அதே மாதிரி என்னிக்கும் நண்பன்'ன்னும் எனக்கு இது வரையிலே யாரும் இருந்தது கிடையாது. சுருக்கமாச் சொல்றேன். என்னதான் தலைகீழ நின்னாலும் மனுஷன் தெய்வமாக முடியுமா ? மனுஷன் மனுஷனாத்தானே இருக்க முடியும்? அது மட்டுமா ? ஒரு மனுஷன் சேஞ்ச தப்புக்கு அவன் மனசு அவனுக்குக் கொடுக்கிற தண்டனைக்கு மேலே வேறே யாரும், எந்தக் கோர்ட்டும் கொடுத்துட முடியாதுங்கிறது என் அனுபவத்திலே நான் கண்ட உண்மை.”

“அது சரி, இந்த விஷயத்தில் கணேசய்யர் உங்களுக்கு எப்படி உதவினார் ?”

“அதுவும் எனக்குத் தெரியாது. அந்தக் கேஸ் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போச்சு. அந்தப் பக்கமா கணேசய்யர்கூட வரல்லே, அவர் காரிலே வேறே யாரோ வந்து, யாரையோ பார்த்து ஏதோ சொன்னாங்களாம்; நான் ரிலீஸாயிட்டேன்"