பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

125


“ஆமாமாம், அதெலலாம் வேறே இருக்கவே இருக்கு. அந்த அப்பாவித் தொண்டராலே நீங்க கடைசியாச் சொன்ன அந்தத் தூக்குத் தண்டனையே அப்போ எனக்குக் கிடைச்சிடும்போல இருந்தது...”

“ஏன், அது தற்செயலாக நேர்ந்த விபத்துதானே ?”

“விபத்துத்தான்! எதிர்க் கட்சிக்காரன் அவ்வளவு சுலபமா அதை விட்டுடுவானா ? அதை வைத்து என்னைக் கொலைக் குற்றவாளியாக்கப் பார்த்தான்...

“அப்போதும் கணேசய்யர் கார்தான் அந்தப் பக்கம் வந்து...”

“ஆமாம், அதுதான் வந்தது; எனக்கு விடுதலையும் வாங்கித் தந்தது.”

“பிறகு.... ?”

“பிறகு என்ன ? பாவிகளை மன்னித்து ரட்சிக்க இயேசுபிரான் இந்த உலகத்தில் பிறந்ததுபோல அவர் என்னை மன்னித்து ரட்சிக்கப் பிறந்திருப்பதாகவே நான் நினைச்சேன்; வழிபட்டேன். அந்தச் சமயத்திலேதான் ரெண்டாவது உலக மகா யுத்தம் வந்தது. எங்கே பார்த்தாலும் விறகுப் பஞ்சம். அந்தச் சமயம் பார்த்து ஒரு சாயபுகாண்ட்ராக்ட்டர் எங்களைக் கும்பகோணத்துக்குக் கூப்பிட்டார்; போனோம். அங்கே நாங்கள் தங்குவதற்காக அவர் பார்த்து வைத்திருந்த வீடு ஒரு பிராமணர் வீடு. அவர் எங்களைப் பார்த்ததும் ‘விரட்டு, விரட்டு'ன்னு விரட்ட ஆரம்பிச்சார். ‘ராட்சசப் பசங்க'ன்னு கத்தினார். அன்னிக்கு அங்கே ஒரு ‘தேவாசுர யுத்த'மே நடந்தது. நாங்க எதுக்கும் சளைக்கல்லே, அவர் வீட்டை விட்டும் போகல்லே. அதோடு நிற்காம அந்த வீட்டு உத்தரங்களையே அங்கிருந்து ஒண்னும்