பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

விந்தன்


இங்கிருந்து ஒண்னுமா எடுத்து, உடைச்சி விறகாக்கி அடுப்பெரிய விட்டோம்...”

“அநியாயமாகவல்லவா இருக்கிறது. இது ?”

‘இல்லேன்னா. எங்க வயிறு எரியறேங்கிறதே!”

“அதற்காக... ?

“நாங்க செய்ததும் தப்புத்தான், என்ன செய்யறது? அப்போ காலம் அப்படியிருந்தது. “

“சரி, அப்புறம் ?”

“எதிர்பாராத விதமா கணேசய்யர்கிட்டேயிருந்து ஒரு ஆள் வந்து, ‘அய்யர் உங்களை உடனே அழைச்சிக்கிட்டு வரச் சொன்னாருன்னு சொன்னான். அவ்வளவுதான்; அந்தக் ‘கண் கண்ட தெய்வ'த்தைக் காண அப்பவே நான் அவனோடே புறப்பட்டுப் போனேன்."