பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20. திருப்பதியில் திருடினேன்!

என்னைக் கண்டதும், ‘வாடா, வா உனக்கு ஒரு நல்ல சேதி’ என்றார் கணேசய்யர்.

‘கெட்ட சேதியாயிருந்தாலும் என்னைப் பொறுத்த வரையிலே நல்ல சேதியா ஆக்கிடுவீங்களே, நீங்க!’ என்றேன் நான்.

‘அப்படி நீ தப்பா நினைச்சுடாதே, அது என்னாலே முடியாத காரியண்டா சட்டமே ஒரு மனிதனின் இயற்கையான உணர்ச்சிகளுக்கு ஓரளவு மதிப்பளித்து, அவன் குற்றத்தை மன்னிக்கும் வகையில்தான் செய்யப்பட்டிருக்கிறது. அந்த இயற்கையையும் மீறி அவன் குற்றம் செய்யும் போதுதான் அது அவனைத் தண்டிக்கிறது. அதையேதான் உன் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லார் விஷயத்திலும் நான் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செய்து வருகிறேன். படித்தவர்களுக்கு இந்த முறையில் என்னதான் செய்தாலும் அது பெரிதாகத் தோன்றுவதில்லை; அப்படி என்ன, பிரமாதமாச் செய்து கிழிச்சிட்டான் ‘னு ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிவார்கள். படிக்காதவன் நீ; மனிதாபிமானத்தோடு நான் செய்த சில காரியங்கள் உனக்குப் பெரிதாகப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் சந்தோஷம். இப்போ உன்னை அழைத்த விஷயம் என்னன்னா, இரண்டாவது உலக மகாயுத்தந்தான் மூண்டுவிட்டதே, தஞ்சை மாவட்டம் முழுவதும் போர்ப் பிரசாரம் செய்யும் பொறுப்பைப் பிரிட்டிஷார் என்னிடம்