பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

139


‘நீ நடத்தப்போற பிரசார நாடகம் எனக்காக இல்லே; பிரிட்டிஷ்காரருக்காக. என்ன வேணும்னு சொல்லு: நான் அவர்களுக்கு எழுதணும்...’

“நூறோ, அம்பதோ கொடுங்களேன்!’

‘அடப்பாவி நாடகத்திலே என்னவெல்லாமோ பேசிச் சக்கைப்போடு போடறே, சொந்த விஷயத்திலே இத்தனை அசடாயிருக்கியே? கொஞ்சம் சமர்த்தா இருக்கப் பாருடா! சம்சாரி நீ; கொஞ்சம் பணம் பண்ணி வைத்துக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் உனக்கு. நான் ஆயிரம், ஆயிரத்தைந்நூறு ஆகுமாம்னு எழுதி வைக்கிறேன். அதாவது, இரண்டு மணி நேர நாடகம்னா ரூபா ஆயிரம்; மூணு மணி நேரம் தொடர்ந்து நடத்தணும்னா ரூபா ஆயிரத்து ஐந்நூறு. அதுக்குக் குறைஞ்சா கட்டுப்படியாகாதாம். அதுகூட துரைமார்கள் சண்டையிலே மாட்டிக் கொண்டிருக்கிறதாலே இந்த சலுகையாம்; இல்லேன்னா இதுக்கு மேலேயும் ஆகுமாம்னு மேலும் ஒரு போடு போட்டு வைக்கிறேன். அவர்களில் யாராவது வந்து உன்னைத் தனியாச் சந்தித்துக் கேட்டா நீயும் அப்படியே சொல்லு, என்ன ?

‘அய்யர் இப்படிக் கேட்டா நான் என்னத்தைச் சொல்வேன்? ‘தெய்வம் வெளியே இல்லே, நமக்குள்ளேதான் இருக்கு'ன்னு பெரியவங்க சொல்லக் கேட்டிருக்கேன். இன்னிக்குத்தான் அந்தத் தெய்வத்தை நான் நேருக்கு நேராப் பார்க்கிறேன்’னு சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டேன்.

‘சரி, போய் வா! இனிமே நீ எங்கெங்கே, எப்போப்போ நாடகம் போடணும்னு கடிதங்களும் செக்குகளும் தொடர்ந்து உனக்கு வந்துகிட்டிருக்கும். அந்தக் கடிதத்திலே உள்ளபடி நீ நாடகம் போடணும். சமயத்திலே நானும் எங்கேயாவது வந்து பார்ப்பேன்; அங்கங்கே உள்ள அதிகாரிகளும் வந்து பார்ப்பார்கள். போய் வர்றியா?

‘சரிங்க'ன்னு தலையை ஆட்டிவிட்டுத் திரும்பினேன். ‘நில்லுடா, வரேன்’னு அய்யர் உள்ளே போனார். கையிலே பெரிய பெரிய லட்டு வடையோடு திரும்பி வந்து, ‘உனக்கு