பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

131


குலைவதாயிருந்தால் இந்த விஷயங்களைத் தயவு செய்து நீங்கள் வெளியிடக் கூடாது....”

“அந்தக் கவலை எங்களுக்கும் இருக்காதா? கிட்டத்தட்ட ‘சத்திய சோதனை’ போல், உள்ளது உள்ளபடி வந்து கொண்டிருக்கும் இந்த வரலாற்றுத் தொடரில் இதை மட்டும் மறைப்பானேன்? வெளியிட்டே விடுவோம்...”

“சரி, செய்யுங்கள்.”

“அப்புறம்.... ?”

“அப்புறம் என்ன, என்னைப் பிடித்த வறுமையே என்னை விட்டு ஒழிந்தது. பட்டி தொட்டியெல்லாம், மூலை முடுக்கெல்லாம் கழகப் பிரசார நாடகத்தோடு யுத்தப் பிரசார நாடகங்களும் கலந்து நடந்தன. பெயர், புகழ், பணம், செல்வாக்கு அத்தனையும் என்னைத் தேடி ஓடி வந்து குவிந்தன. மதுரை சவுந்தர பாண்டிய நாடார், தூத்துக்குடி தனுஷ்கோடி நாடார், விருதுநகர் வி.வி. ராமசாமி நாடார் போன்ற பல பெரிய புள்ளிகள் எனக்கு அறிமுகமானார்கள், அந்தரங்க நண்பர்களானார்கள். கழகத்தையும் என்னையும் கட்டி வளர்த்தார்கள்...”

“அதென்ன, எல்லாம் ஒரே நாடார்களாகவே இருக்கிறார்கள் ?”

“அந்த நாளில் மேல் சாதிக்காரர்கள் அரிசனங்களுக்கு இழைத்து வந்த கொடுமையை விட நாடார்களுக்கு இழைத்து வந்த கொடுமைதான் அதிகம். அதனாலேயே திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்கு அவங்க பங்கே அப்போ அதிகமாயிருந்தது. காளிமார்க் சோடா கம்பெனி பரமசிவ நாடார் இருக்காருங்களே, அவர் அப்போ என் பேரிலே ‘எம்.ஆர்.ராதா சோடா'ன்னு ஒரு தனி சோடாவே போட்டு அந்தப் பக்கத்திலே விற்க ஆரம்பிச்சார்!"