பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

விந்தன்


“இல்லாதவன் யாராயிருந்தாலும் அவனுக்கு நிச்சயம் அதிலே ஓர் ஈடுபாடு இருக்கத்தானே இருக்கும்?”

“சரி, அப்புறம்... ?”

“கம்யூனிஸ்ட் தலைவர்களெல்லாம் வழக்கம் போல ‘அண்டர்கிரவுண்டு'க்குள்ளே போக ஆரம்பிச்சிட்டாங்க. அவர்களிலே ஒருத்தர் ஜீவானந்தம். அவரை ஒரு பிராமண நண்பர் என்கிட்டே அழைச்சிக்கிட்டு வந்து, நீங்கதான் இவருக்கு அடைக்கலம் கொடுக்கணும்'னார். சரி'ன்னு அவரை நான் மேக்அப் ரூமுக்கு அனுப்பி, மொதல்லே தலையை மொட்டையடிக்கச் சொன்னேன். அப்புறம் நெற்றியிலும் கைகளிலும் பட்டைப் பட்டையா விபூதியைப் பூசி, தியேட்டர் முதல் வரிசையிலேயே அவரை உட்கார வைத்து, தைரியமா நாடகம் பார்க்கச் சொன்னேன்."