பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. நண்பர் ஜீவானந்தம்

“உங்கள் நாடகத்துக்கு அரசாங்கத்தார் தடை விதிப்பதும, அந்தத் தடையை மீறி நீங்கள் நாடகம் நடத்துவதும்தான் எப்போதும் சர்வசாதாரணமாயிருந்து வந்திருக்கிறதே, நீங்கள் என்ன செய்தீர்கள்? தடையை மீறிப் ‘போர்வாள்’ நாடகத்தை நடத்தினீர்களா ?”

“இல்லே, அதிலே வேடிக்கை என்னன்னா, அந்தத் தடையைப் போட்டவங்க பிரிட்டிஷ் சர்க்கார் கூட இல்லே, அப்போ சென்னையிலே நடந்துகிட்டிருந்த பிரகாசம் சர்க்கார்தான் போட்டது.”

“அவருடைய ஆந்திராவுக்கும் சேர்த்துத்தானே உங்கள் ‘போர்வாள்’ நாடகத்தில் நீங்கள் ‘திராவிட நாடு’ கேட்டுக் கொண்டிருந்தீர்கள்? அதற்கு அவர் ஏன் தடை விதிக்க வேண்டும்?”

“யாருக்குத் தெரியும், நாங்களும் அப்போதைக்கு அதை மீற விரும்பாம, வேறே நாடகங்களை நடத்த ஆரம்பிச்சோம். ஏன்னா, அப்போ நாட்டு நிலவரம் நல்லாயில்லே. எங்கே பார்த்தாலும் ஒரே கம்யூனிஸ்ட் கலாட்டா, குழப்பம் பொன் மலையிலே கம்யூனிஸ்ட்டுகளைச் சுட்டுத் தள்றாங்கன்னு ஒரே புரளி, பீதி! பிரகாசம் வேறே ஒரு கம்யூனிஸ்ட்டைக்கூட வெளியே விடாம பிடிச்சி உள்ளே தள்ளிக்கிட்டே இருந்தார். அந்தச் சமயத்திலே என்கிட்டேகூட ஒருத்தர் வந்து, ‘நீங்க