பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

விந்தன்


பழைய சாமான்களை வந்த விலைக்குக் கொடுத்துடுவானுக. அதை வாங்கி விற்கிறது. தமிழனா, வீடே குப்பைத் தொட்டியானாலும் சரி, எந்த சாமானையும் வெளியே விட மாட்டேன்னு வெச்சிக்கிட்டிருக்க?”

“உங்கள் தகப்பனார் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் ?”

“கெளரவமாச் சொல்றதாயிருந்தா யுத்த சேவை செஞ்சிக்கிட்டிருந்தார்னு சொல்லணும்.... நான் அப்படிச் சொல்ல மாட்டேன். மனுஷனுக்கு வேறே வேலை கெடைக்கலை, பட்டாளத்திலே சேர்ந்துட்டார். அதுதான் பேக்ட்!”

“அதற்கும் ஒரு வீரம் இருக்க வேண்டுமே ?” “தமிழனைப் பொறுத்த வரையிலே எந்த வீரமும் சோறில்லாமப் போனாத்தான் வரும்!”

“கரெக்டாச் சொன்னீங்க, அப்புறம் ?” “அப்புறம் என்ன ? ரஷ்ய எல்லையிலே, பஸ்லோவியா என்ற இடத்திலே அவர் வீர மரணம் அடைஞ்சிட்டார்னு எங்களுக்குச் சேதி வந்தது. அதோடு அவர் சேப்டர் க்ளோஸ். அவர் ‘வார்’ சமயத்திலே வாங்கிய மெடல்களை மட்டும் நான் இன்னும் பத்திரமா வெச்சிக்கிட்டிருக்கேன்.”

“அவர் இறந்த பிறகு தான் உங்களைக் கொண்டு போய் நாடகக் கம்பெனியிலே விட்டார்களா ?”

“இல்லை; முதல்லே என்னை யாரும் கொண்டு போய் விடலே, நானாத்தான் போனேன். போனேன்னா, நேரா நாடகக் கம்பெனிக்குப் போயிடலே....”

“வேறு எங்கே போனீர்கள் ?” “சொல்றேன்; வீட்டிலே படிக்கிறவனுக்கும் படிக்காதவனுக்கும் வித்தியாசம் காட்டினாக....”

“அது என்ன வித்தியாசம்?"