பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

161


“இந்த அக்கிரமத்துக்கெல்லாம் காரணம் அந்த நாள் நாடகங்களில் பெண்கள் நடிக்க முன் வராதது தான், இல்லையா ?”

“அதுதான் காரணம்னு சொல்ல முடியாது; அதுவும் ஒரு காரணம்னு வேணும்னா சொல்லலலாம். மனுஷன் பல விஷயங்களிலே இன்னும் தன் காட்டுமிராண்டித்தனத்தை விட்ட பாடாயில்லையே? அதைத்தானே பெரியார் இன்னிக்கும் பேச்சுக்குப் பேச்சு சொல்லிக்கிட்டிருக்கார்?”

“டி.பி.ராஜலட்சமி நாடக மேடைக்கு வந்த பிறகு...”

“அந்த அசிங்கம் நாடகமேடையை விட்டுக் கொஞ்சங் கொஞ்சமா மறைஞ்சது என்னவோ உண்மைதான். ராஜலட்சுமியைத் தொடர்ந்து இன்னும் பல பொண்ணுங்க நாடக மேடைக்கு வந்தாங்க. அவங்களிலே ஒருத்தி பிரேமா. அந்தப் பிரேமாதான் ஆண் மோகத்திலிருந்து என்னை விடுவித்து, பொண் மோகம் கொள்ளச் சேஞ்சவ...”

“அப்படியென்றால் உங்களுடைய முதல் காதல் பிரேமாவிடம்தான் அரும்பிற்றா ?”

“ஆமாம், அது முதல் காதலோ, முடிவில்லாத காதலோ, அது எனக்குத் தெரியாது. என்னுடன் நடித்து வந்த அவளை நான் அப்போ மனமார நேசித்தேன். என் இதய ராணியாயிருந்த அவள், வெளியார் பார்வைக்கும் ராணியாவே இருக்கணும்னு நினைச்சி, பட்டுப் புடவையைத் தவிர வேறே எத்தப் புடவையும் கட்ட வேணாம்னு அவகிட்டே சொன்னேன். நெற்றிச் சுட்டியிலிருந்து பாதசரம் வரை நகைங்க சேஞ்சிப் போட்டு, அவ அழகை உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பார்த்துப் பார்த்து ரசித்தேன். அவளுடைய கொள்ளையழகு மட்டுமில்லே, குரலழகும் என்னைத் தேனுண்ட வண்டாக்கிடிச்சி. ஓய்வு கிடைச்சப்போல்லாம் அவளைப் பக்கத்திலே உட்கார வைச்சிக்கிட்டு, ‘பேசு, ஏதாவது பேசு, பேசிக்கிட்டே இருன்னு; பேசச் சொல்லிக் கேட்டேன்; பாடச் சொல்லியும் கேட்டேன். அந்த அழகு ராணியோடு நான் கோயமுத்துரில் தங்கியிருந்த சமயம் அது. அப்பதான் பம்மல் சம்பந்த