பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

விந்தன்


27. இரு கெட்டிக்காரர்கள் கதை

“நாடகம் சிலருக்குக் கலையாயிருக்கும் ; சிலருக்குத் தொழிலாயிருக்கும். எனக்கோ கலையாகவும் தொழிலாகவும் மட்டுமில்லே, தொண்டாகவும் இருந்தது, தொண்டுன்னா நான் வேறே எந்தத் தொண்டையும் சொல்லல்லே, சமூகச் சீர்திருத்தத் தொண்டைத்தான் சொல்றேன்,”

“பெரியார் சீடராயிற்றே, வேறு என்ன தொண்டைப் பற்றிச் சொல்லப் போகிறீர்கள் ?”

“பெரியார் சீடனாயிருந்தாலும் அந்தத் தொண்டுக்கு முதலில் எனக்கு வழி காட்டியவர் பேரறிஞர் அண்ணாங்கிறதை நான் இன்னும் மறக்கல்லே, என்னிக்கும் மறக்க மாட்டேன்...”

“அது எப்படி”

“அவர்தான் திருச்சி திராவிடக் கழக மாநாட்டிலே என் நாடகம் நடப்பதற்கு முதல்லே ஏற்பாடு செய்தவர்...”

“அண்ணா ரகசியமாகக் குடிப்பதுண்டு என்று சிலர் சொல்கிறார்களே, அது உண்மையா?”

“பொய். அவருக்கும் அந்தப்பழக்கம் கிடையாது; பெரியாருக்கும் அந்தப் பழக்கம் கிடையாது. பெரியாராவது வாலிபராயிருந்தப்போ, சில குடிகார நண்பர்களோடு கூடிக் குலாவியதுண்டாம். அவர்களிலே சிலர் இவர் வாயிலே பலவந்தமாகப் பிராந்தியையோ, விஸ்கியையோ ஊத்தி