பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

165


வைக்கக்கூட முயன்றதுண்டாம், அதற்கு டிமிக்கி கொடுத்துட்டு இவர் வீட்டுக்கு வந்தா இவருடைய சம்சாரம். சம்சாரம்னா இப்போ இருக்கிற மணியம்மை இல்லே, நாகம்மை... வாயை ஊதச் சொல்லி மோப்பம் பிடிச்சிப் பார்ப்பாராம். அந்த ஒரு விஷயத்திலே மட்டும் பெரியார் கூட எல்லாரையும் போலப் பெண்டாட்டிக்குப் பயந்தவராயிருந் திருக்கார்ன்னா, பார்த்துக்கங்களேன்! எனக்குத் தெரிஞ்ச வரையிலே அண்ணா அந்த வம்புக்கே போக மாட்டார். ‘துஷ்டரைக் கண்டா துார ஒரு அடி'ம்பாங்களே, அந்த மாதிரி குடிச்சிட்டு வரவன் தன் நண்பனாயிருந்தாலும் அந்தச் சமயம் அவர் அவனை விட்டு ஒதுங்கிவிடுவார்...”

“அப்படியானால் அவர் இருந்திருந்தால் மதுவிலக்கை ஒத்திவைத்திருக்கமாட்டார் என்று இப்போது சிலர் நினைப்பதுபோல் நீங்களும் நினைக்கிறீர்களா ?”

“என்னாலே அப்படி நினைக்க முடியல்லே. ஏன்னா, வசதியுள்ளவன் பெர்மிட் வாங்கிக் குடிக்கிறது, அதுக்கு வழியில்லாதவன் அவன் வாயைப் பார்த்து ஏங்கறதும் வார்னிஷ் குடிச்சிச் சாகறது'மாயிருக்கிறதை அவராலும் ரொம்ப நாள் பார்த்துக்கிட்டிருந்திருக்க முடியாது. அதாலே ‘மதுவிலக்கைக் கொண்டு வந்தா இந்தியா பூராவும் கொண்டு வாங்க, இல்லேன்னா ஒத்தி வைச்சிடுவேன்’னு அவரும். முதல்வர் கருணாநிதியைப்போலவே எச்சரித்திருப்பார், ஒத்திவைத்தும் இருப்பார்...”

“ம், பிறகு... ?”

“சினிமா, நாடகம், சங்கீதம், கச்சேரி, நாட்டியம்னாத்தான் அந்த நாளிலே டிக்கெட் போட்டு விற்பாங்க, ஜனங்களும் காசு கொடுத்து வாங்கிட்டுப் போய்ப் பார்ப்பாங்க. அந்த வழக்கத்தையொட்டி மாநாடுகளுக்கும் முதல்லே டிக்கெட் போட்டு வித்தவங்க திராவிடக் கழகத்தார்தான்.”

“அவர்கள்தான் மேடைப் பேச்சை வெறும் பேச்சாக நினைத்துப் பேசுவதில்லையே? மேடைக் கச்சேரியாகவே