பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

171


28. தி.மு.கவும் நானும்

“அறுபத்திரண்டு எலெக்ஷன்னு நினைக்கிறேன்; ஜெமினி வாசன் ஒரு நாள் என் தோட்டத்துக்கு டெலிபோன் செய்து,'ஒரு காரியமா உங்களைப் பார்க்கணும். நான் உங்க தோட்டத்துக்கு வரட்டுமா, நீங்க என் வீட்டுக்கு வர்றீங்களா ?'ன்னார். நானே வரேன்'ன்னு போனேன். அப்போ காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் ஒரு படம் எடுத்துக்கிட்டிருந்தார். அதிலே நீங்களும் நடிக்கணும்னார். ‘நடிக்கிறேன்; என் கருத்தைச் சொல்ல இடம் கொடுப்பீங்களா ?'ன்னு கேட்டேன். காமராஜைக் கேட்டுச் சொல்லணும்'னார். ‘கேளுங்கன்னேன். கேட்டார்; அது முடியாது'ன்னு அவர் சொல்லிட்டார். உங்க கருத்துக்கு ஒத்தாப்போல என்னாலும் பேசி நடிக்க முடியாது'!ன்னு சொல்லிட்டு நான் வந்துட்டேன்.”

“ஏன், அப்படிச் சொல்லிவிட்டு வந்து விட்டீர்கள்? அப்போது பெரியார் காங்கிரலை ஆதரித்தும், தி.மு.கவை எதிர்த்தும் தானே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்?”

“அது என்னவோ உண்மைதான். ஆனா, என் சமாசாரம் வேறே. அப்போ நான் பெரியாருக்காகத்தான் தி.மு.கவைத் திட்டறாப் போல நடிச்சிக்கிட்டிருந்தேனே தவிர, உண்மையா திட்ட என் மனம் இடம் கொடுக்கல்லே. காரணம், அவங்களிலே பலர் எனக்கு அன்னிக்கும் நண்பருங்க இன்னிக்கும் நண்பருங்க. தி.க வை விட்டுத்