பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

177


29. அண்ணாவின் ஆசை

“சிவாஜிகணேசனும் நானும் சேர்ந்து நடிச்ச ‘பாகப்பிரிவினை’ படம் வந்தது. அதை மெஜஸ்டிக் ஸ்டுடியோவிலே போட்டு அண்ணாவுக்குக் காட்டினாங்க...”

“எந்த மெஜஸ்டிக் ஸ்டூடியோ, இப்போதுள்ள சாரதா ஸ்டூடியோதானே ?”

“ஆமாம். அந்தப் படத்தைப் பார்த்த அண்ணா, ‘எம்.ஜி.ராமச்சந்திரனோடு நீங்க இப்படிச் சேர்ந்து நடிக்கணுங்கிறது என் ஆசை'ன்னார். அதுக்கென்ன, நடிச்சாப் போச்சு'ன்னு நான் தேவரைப் பார்த்தேன்...”

ஏன், அவரால்தான் உங்கள் இருவரையும் சேர்த்து வைத்துப் படம் எடுக்க முடியும் என்றா ?”

“இல்லே, அண்ணாவின் ஆசையை அவரால்தான் சீக்கிரமா நிறைவேற்றி வைக்க முடியுங்கிறது என் எண்ணம்.”

“தேவர் என்ன சொன்னார் ?”

“அவர் கொஞ்சம் தயக்கத்தோடு ‘எம்.ஜி.ஆர். தகராறு செய்வாருன்னு சொல்றாங்களே ?'ன்னார். அப்போ எனக்கு அது சரியாப் படல்லே. ஏன்னா, எம்.ஜி.ராமச்சந்திரன் இப்போ கட்சி, கிட்சின்னு சொல்லிக்கிட்டிருந்தாலும் ஒரு காலத்திலே கட்சின்னாலே வெறுத்துக்கிட்டிருந்தவர். ஒரு சமயம் ஒரு மாநாட்டு நாடகத்திலே சிவாஜி வேஷம் போடப் பெரியார் அவரைக் கூப்பிட்டப்போ, ‘கலைஞனுக்குக் கட்சி வேணாங்கிறது என் கருத்து. அதாலே கட்சி நாடகத்திலே