பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

179


“சர்.சி.வி.ராமனா ?”

“இல்லே. அந்த ராமன் வேறே, இந்த ராமன் வேறே. இவர். இங்கே ‘நாராயணன் கம்பெனி'ன்னு ஒரு சினிமாக் கம்பெனி இருந்ததே, அந்தக் கம்பெனி முதலாளியின் அண்ணன். இவர் முதல்லே படம் எடுக்க மாட்டார். நாலு போட்டோதான் எடுப்பார். ஒரு ஹீரோ போட்டோ, ஒரு ஹீரோயின் போட்டோ, ஹீரோவும் ஹீரோயினும் கட்டிப் பிடிச்சிக்கிட்டு நிற்கிறாப் போல ஒரு போட்டோ; ஹீரோவை வில்லன் கத்தியாலே குத்தப் போறாப்போல ஒரு போட்டோ; இப்படி நாலு போட்டோக்களை எடுத்துக்கிட்டுச் செட்டிநாட்டுப் பக்கம் போவார். அங்கே யாராவது ஒரு செட்டியாரைப் பிடிச்சி, அவர்கிட்டே அந்தப் போட்டோக்களைக் காட்டியே இருபதாயிரம், முப்பதாயிரம் வட்டிக்குக் கடன் வாங்கிக்கிட்டு வந்துடுவார். அந்தப் பணத்தை வைச்சி முப்பது நாள் என்ன, இருபது நாளிலேயே படத்தை எடுத்து முடிச்சிடுவார். இவர் ‘சோகா மேளர்'ன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டிருந்தப்போ, நான் வேறே வேலையா சென்ட்ரல் ஸ்டுடியோவுக்குப் போயிருந்தேன். ‘என் படத்திலே நீயும் ஒரு வேஷம் போடேண்டா'ன்னார்: ‘என்ன வேஷம் ?’னு கேட்டேன். ‘பறையன் வேஷம்'னார். ‘சரி, போட்றேன்'னு போட்டேன். அந்தப் படத்திலே கொத்தமங்கலம் சுப்பு தம்பி கொளத்து மணி வேதியரா நடிச்சதா ஞாபகம். அவர் ஒரு காட்சியிலே, போடா, பறப்பயலே!'ன்னு என் கன்னத்திலே அறைஞ்சார். எனக்குக் கோபம் வந்துடிச்சி; ‘போடா, பாப்பாரப் பயலே!'ன்னு பதிலுக்குத் திருப்பி அறைஞ்சுட்டேன். அறைஞ்சப்புறம்தான் ஆத்திரத்திலே அவசரப்பட்டு இப்படிச் செஞ்சுட்டோமேன்னு காமிரா பக்கம் திரும்பி, ‘கட்’,கட்'ன்னு நானே டைரக்டருக்குப் பதிலா கட்’ சொன்னேன். ‘கட்டும் வேணாம், வெட்டும் வேணாம்; அப்படியே இருக்கட்டும். அதுதான் நேச்சுரலாயிருக்கும்’னு சொல்லிவிட்டார் ராமன். படம் முடிஞ்சி, நடிச்சதுக்காக ஏதாவது பணம் கொடுப்பார்னு போனப்போ, அவர் சாப்பிட்டியா?'ன்னார். ‘சாப்பிட்டேன்'னேன். ‘நல்லா சாப்பிடு; வேளா வேளைக்குக்