பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

விந்தன்


காலந்தவறாம ஒழுங்கா சாப்பிடு. அதுதான் உடம்புக்கு நல்லது'ன்னு சாப்பாட்டைப் பற்றியே பேசிக்கிட்டிருந்தார். ‘பணம்?'னேன். ‘நீ கூடவா என்னைப் பணம் கேட்கிறது ? நான் பி.ஏ.வரையிலே படிச்சிட்டு வேறே வழியில்லாம இந்தத் தொழிலுக்கு வந்து, மாசத்துக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கிடைச்சாக்கூடப் போதும்னு இருபது நாளைக்கு ஒரு படத்தை எடுத்துச் சுருட்டிக்கிட்டிருக்கேன். உனக்கென்னடா, நீதான் டிராமாவிலேயே போடு, போடுன்னு போட்டுக்கிட்டிருக்கியே? போடா, போய் நல்லா சாப்பிடு; அதுதான் உடம்புக்கு நல்லது'ன்னார். அதுக்கு மேலே என்னத்தைச் சொல்றது? சிரிச்சிக்கிட்டே வந்துட்டேன். அது ஒரு காலம்.”

“தேவருக்கும் அந்த ராமனைத் தெரியுமா?”

“தெரியும்னுதான் நினைக்கிறேன்.”

“சரி. அப்புறம்?”

“எம்.ஜி.ஆரைப் பற்றி நான் சொன்னதோடு என் மேக்கப் மேன் கஜபதியை வேறே அனுப்பி அப்பப்போ தேவர்கிட்டே சொல்லச் சொன்னேன். அதுக்கு மேலே ‘தகராறு பண்ணா கான்சல் பண்ணிடுவேன்'கிற நிபந்தனையோடு அவர் ராமச்சந்திரனையும் என்னையும் சேர்த்துப் போட்டுப் படம் எடுக்க ஆரம்பிச்சார்.”

“அவர் எதிர்ப்பார்த்தபடி தகராறு ஏதாவது.”

“ஒண்ணும் இல்லே, தகராறு வந்ததெல்லாம் தாயைக் காத்த தனயன்கிற படத்தாலேதான்.”

“அதாலே என்ன தகராறு ?”

“அந்தப் படத்திலே எம்.ஜி.ஆரோடு நானும் என் மகன் வாகவும் சேர்ந்து நடிச்சோம். படம் வெளியே வந்தது. அதிலே எம்.ஜி.ஆர். சரோஜா தேவி, அசோகன் எல்லாரும் இருந்தும், விமர்சனம் எழுதறப்போ சில பேப்பர்காருங்க, ‘இந்தப் படத்திலே தகப்பனும் மகனும்தான் நிற்கிறாங்க, மற்றவங்க நிற்கலே'ன்னு எழுதினாங்க. இதைப் பார்த்தப்போ, வட நாட்டிலே ஒரு நடிகர் பரம்பரையை உருவாக்கிய